Sunday 29 November 2015

Happy birthday Friend...

பிறந்த நாள் வாழ்த்துகள் நன்பா....

Sunday 22 November 2015

மூன்று மூன்று மூன்று...

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு

சும்மா ஒரு மழை...

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்🌧⛈

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது

செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது

WIFE: செம அடி அடிக்குது. 

HUSBAND: வாங்கு வாங்குன்னு வாங்குது..

Wednesday 18 November 2015

யார் நண்பன் ..?

கூட வருபவரெல்லாம் நண்பரில்லை
எதிரே நிற்பவன் எல்லாம் எதிரியுமில்லை !
முகத்துக்கு முன்னே சிரிப்பார் ..
முதுகுக்குப் பின்னே உதைப்பார்..!

துன்பம் வர வேண்டிக்கொள்..!
துன்பமே நண்பர்களை அளக்கும் கோல்..!
அளந்து எதிரியைத் தெரிந்து கொள் ..!

எவரையும் எளிதில் நம்பாதே !
நம்பியபின் சந்தேகத் தீயில் வெம்பாதே !

"ஆமா"போடுபவன் எல்லாம் நண்பனல்ல !
"இல்லை" சொல்பவன் எல்லாம் எதிரியுமல்ல !

உண்மையான நட்பு காதலை விட மேலானது !
உண்மைக்காதல் நட்புக்குச் சமமானது !

உணர்ந்து அறி !
துரோகிகளைத் தூக்கியெறி !

Sunday 11 October 2015

எந்த வேலையை யாரிடம் கொடுப்பது?

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன.

தோட்டக்காரன் செய்யும் வேலைகளைப் பார்த்துப் பார்த்துக் குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது.

குரங்குகளை அழைத்து தோட்டத்திலிருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொன்னான்.

குரங்குகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. எனவே அவை தோட்டக்காரனிடம் எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கேட்டன.

“அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரிதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிய வேராக இருந்தால் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்” என்று குரங்குகளுக்கு யோசனை சொன்னான்.

குரங்குகளும் சரி என்றன.

தோட்டக்காரன் வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.

தோட்டத்திலிருந்த செடிகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன.

அவன் குரங்குகளிடம், “இது எப்படி நடந்தது?” என்று கேட்டான்.

“வேர் பெரிதாக இருக்கிறதா, சிறியதாக இருக்கிறதா என்று பார்க்க நாங்கள்தான் செடிகளைப் பிடுங்கிப் பார்த்துத் தண்ணீர் ஊற்றினோம்” என்றன அந்தக் குரங்குகள்.

தோட்டக்காரன் அதைக் கேட்டு அங்கேயே சரிந்தான்.

எந்த வேலையை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் கொடுத்தால் இப்படித்தான் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்...

Thursday 8 October 2015

பிரம்மராட்சஷன்...

ஒரு ஊரில் ஆலமரம் ஒன்று இருந்தது. அதுநல்ல சுவையுடைய நீரைக் கொண்ட ஒருகுளக்கரையில் இருந்தது. அந்த ஆலமரம்முதிர்ந்த வயதை உடையது.

அதன் நிழல் எப்பொழுதும் "குளுகுளு" வெனஇருக்கும். ஆலமரத்தடியில் ஒரு பெரிய மேடை இருந்தது.

ஊருக்குச் செல்லும் பிரதான சாலை அந்த ஆலமரத்தை ஒட்டியே சென்றது. நான்குபக்கமுள்ள சிற்றூர்களுக்கும், பேரூர்களுக்கும்அந்த சாலை வழியாகத் தான் சென்றாகவேண்டும்; திரும்பி வந்தாக வேண்டும்.அதனால் அந்த சாலை மக்கள் பெருக்கம்நிறைந்து காணப்பட்டது.

வெயிலில் வருகிறவர்களுக்கு ஆலமரமும்அதன் "குளுகுளு" நிழலும் அருகில் குளத்தில்கிடைக்கும் கற்கண்டு போன்ற தன்மையிலானநீரும் பாலைவனத்து பசுஞ்சோலைபோலிருந்தன.

வெயிலில் வந்து களைப்புத் தீர குளத்து நீரைபருகி, முகம் கழுவி, கல் மேடையில் ஆலமரத்துநிழலில் அமர்ந்து கொள்வர். நல்ல ஓய்வுகிடைக்கும் வரை அப்படி உட்கார்ந்து கொள்வர்.சிலர் துண்டை விரித்து போட்டு படுப்பதும்உண்டு.

அங்கே மக்கள் கூட்டம் எப்போதும், "ஜேஜே"என்றிருக்கும். ஆனால், சிறிது நாட்களாகஆலமரத்தடியில் வந்து தங்கி இளைப்பாறும்மக்கள் தொகை குறைய ஆரம்பித்தது.

ஆலமர நிழலுக்கு ஓடோடி வரும் அவர்கள்இப்போது அதன் அருகில் வரவே அஞ்சத்தொடங்கினர். தொலைவிலே நடந்துசென்றனர்.

ஆலமரத்தை அருகில் கடந்து செல்ல வேண்டிவந்தால் ஓட்டமாக ஓடினர். ஆலமரத்தைதிரும்பிக் கூட பார்க்காது சென்றனர். அதற்குகாரணம் அந்த ஆலமரத்துக்கு புதிதாக வந்துசேர்ந்த ஒரு பிரம்ம ராட்சஷன் தான்.

நீர் அருந்தஇளைப்பாறஅவர்கள்உட்காருவதற்கு முன் மரத்தின் நீண்டகிளைகளை ஆட்டி பயமுறுத்தும். அவர்களிடம்மூன்று கேள்விகள் கேட்கும். அதற்கு அவர்கள்என்ன பதில் சொல்கின்றனர் என்று பார்க்கும்.அவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால்அதற்கு கடும் கோபம் வரும்.

அவர்கள் தலையை கிள்ளி எடுத்து விடும்.கிள்ளி எடுத்த தலையை ஆலமரக் கிளைகளில்தொங்கவிடும். அப்படி அகப்பட்ட தலைகள்ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

அதனாலேயே யாத்ரீகர்கள், வழிபோக்கர்கள்,ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் ஆலமரநிழலில் தங்க அஞ்சி அதன்அருகிலேயேவரயோசித்தனர்.

ஒரு மாமன்னன் தன் படைகளுடன் வந்துஇறங்கத்தக்க அளவுக்கு ஆலமரம் பெரிதாகவும்,அதை விட அதன் நிழல் பெரிதாக இருந்தும்எவருக்கும் பயன்படாமல் வீணாகிக்கொண்டிருந்தது.

குளத்து நீர் எவரும் பருகப்படாமல் பாசிப்படிந்துஅதில் அல்லி, தாமரைப்பூக்கள் பூக்கஆரம்பித்தன.

அந்த ஆலமரத்தின் அருகில் சற்று தள்ளி ஒருகிராமம் இருந்தது. அதன் பெயர் சிங்கப்பட்டி.அக்கிராமத்தில் ராமாயி என்ற பாட்டி இருந்தாள்.அறுபது வயது இருக்கும். அவளுக்கு ஒரு பெண்இருந்தாள். அவள் பெயர் வசந்தா. அவளுக்குதிருமணம் ஆகி ஒரு அழகிய ஆண் குழந்தைபிறந்தது. அவன் பெயர் சுடலை. அவனுக்கு ஆறுவயது நடந்து கொண்டிருக்கும் போது அவன்அம்மாவும், அப்பாவும் சென்ற படகு ஆற்றில்கவிழவே இருவரும் இறந்து போயினர்.பேரனை வளர்க்கிற பொறுப்பு பாட்டியைசேர்ந்தது.

குழந்தை பிற்காலத்தில் பேரறிஞனாகவும்,கவிஞனாகவும் வருவான் என்பது அவன்படிப்பில் காட்டிய ஆர்வமும் கேட்கத் தொடங்கியகேள்விகளுமே தெள்ளத் தெளிவாகக் காட்டின.

எதையும் ஏன், எதற்கு என்று அவன் கேட்கத்தொடங்கி தன் அறிவை வளர்த்துக் கொள்வதில்அக்கரை காட்டினான். தன் பேரன்புத்திசாலியாக இருப்பதை அறிந்து பாட்டிமகிழ்ந்தாள்.

அப்படி ஒரு முறை அருகில் உள்ள ஊரில் நடந்தஒரு திருவிழாவிற்கு பேரனை அழைத்துச்சென்றாள் பாட்டி. அப்படி போகும் போதுபிரம்மராட்சஷன் வாழும் ஆலமரத்தை ஒட்டியசாலை வழியாக அவர்கள் செல்ல வேண்டிவந்தது.

அந்த ஆலமரத்தில் வாழும் பிரம்ம ராட்சஷனைப்பற்றி பாட்டி நன்கு அறிந்திருந்ததால் பேரனைஆலமரத்தை விட்டு ஒதுக்கி அழைத்துச்சென்றாள்.

பெரியதும் நிழல் கொடுக்கக்கூடியதுமானஆலமரத்தடியில் சிறிது நேரம் விளையாடி விட்டுபிறகு குளத்தின் குளிர்ந்த நீரையும்பருகிவிட்டுச் செல்ல விரும்பினான் சிறுவன்.

“சுடலை! ஆலமரத்தில் வாழும் பிரம்மராட்சஷன்பொல்லாதது... அது ஆலமர நிழலில்தங்குகிறவர்களிடம் மூன்று கேள்விகள்கேட்கும். அந்த கேள்விகளுக்கு சரியான பதிலைகூறாவிட்டால் அவர்கள் தலையை கொய்துஆலமரத்தடியில் கட்டித் தொங்கவிட்டு விடும்.அதனால் இப்போது ஆலமரத்து அருகேசெல்லவே அஞ்சுகின்றனர். வா நாம்போய்விடலாம்!'' என்றாள் பாட்டி.

“பாட்டி! அப்படி என்ன மூன்று கேள்விகளைகேட்கிறது அந்த பிரம்மராட்சஷன்? அதற்குஇவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?'' என்றுகேட்டான்.

“முதல் கேள்வியாக உலகில் எது பெரியது?''என்று கேட்கும்."

“சரி! அதற்கு அவர்கள் என்ன பதில்சொல்வார்களாம் பாட்டி!''

“இமயமலை என்பார்களாம்!''

“அது சரியான பதில் இல்லையா?''

“ஆம்... பிரம்மராட்சஷன் அடுத்ததாகஇரண்டாவது கேள்வியான நல்லதை விடதீமையே அதிகம் செய்யும் சிறிய வஸ்து எது?''என்று கேட்கும்.

“பாம்பின் விஷம் சிறிதாக மருந்துக்குபயன்படுகிறது. ஆனால், மரணம்விளைவிக்கவே அதிகமாக பயன்படுகிறது!''என்பர்.

“அந்த பதிலும் சரியில்லை என்றுசொல்லிவிடுமா?''

“ஆமாம்... மூன்றாவது கேள்வியாக உருண்டுவேகமாக ஓடுவது எது?'' என்று கேட்கும்.

“அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?''

“வண்டிச்சக்கரம், பணம் என்று சொல்வர்". இந்தபதில்கள் பிரம்ம ராட்சஷனுக்கு திருப்தியைஅளிக்காது. உடனே அவர்கள் தலையை கிள்ளிஎடுத்து மரத்தில் தொங்கவிட்டு விடும். சுடலை...நாம் இங்கிருப்பது ஆபத்தை விளைவிக்கும்.வா... போய் விடலாம்,'' என்று அவனது கையைபிடித்தாள் பாட்டி ராமாயி.

ஆலமரம் அருகில் சென்றான் பேரன். கால்களைஅகல விரிந்து பலமாக ஊன்றி இடுப்பின்இருபுறமும் கைகளை பதித்து பெருங்குரலில், “ஏ... பிரம்மராட்சஷா... உன் கேள்விகளுக்குபதில் சொல்ல வந்திருக்கிறேன். வா...வெளியே... கேள் உன் கேள்விகளை!'' என்றுகூறினான்.

“யாரடா சிறுவன் என் கேள்விகளுக்கு பதில்சொல்ல தோள்தட்டி வந்திருப்பது?'' என்றபடிஆலமரத்தில் இருந்து வெளி வந்தபிரம்மராட்சஷன், சிறுவன் பயப்படட்டும் என்றுதலைகள் தொங்கும் ஆலமரக் கிளைகளைஉக்கிரமாக ஆட்டிற்று. அது புயல் வீசுவது போலபயங்கரமாக இருந்தது.

அதை கண்டு அஞ்சவில்லை. “ஏ...பிரம்மராட்சஷா... உன் உருவம் கண்டு எள்ளிநகையாடாதே... கேள் உன் கேள்விகளை?''என்றான்.

“சாவதென்று வந்து விட்டாய்... உன் விதியையாரால் மாற்ற முடியும்? என் முதல் கேள்விஇதுதான். உலகிலேயே பெரியது எது?'' என்றுஆலமரத்து கிளைகளை பயங்கரமாக ஆட்டியபடிகேட்டது.

“உலகில் பெரியது அன்பு,'' என்றான்.

அதைக் கேட்டதும் பிரம்மராட்சஷனின் கண்கள்கலங்கின. "சரியான பதிலைசொல்லிவிட்டாயே?" என்பது போல சுடலையைபார்த்தது.

"அடுத்த கேள்வியைக் கேள்!'' என்றான் சுடலை."

“நன்மையை விட தீமையே செய்கிற சிறியவஸ்து எது?''

“மனிதனின் நாவு!'' என்றான்.

தான் நினைத்திருந்த பதிலையே தங்குதடையின்றி சொன்னதும் பிரம்மராட்சஷன்அசந்து போயிற்று. மூன்றாவதாக தான் கேட்கப்போகிற கேள்விக்கு அவன் என்ன பதில்சொல்லப் போகிறான் என்றெண்ணி, “உருண்டுவேகமாக ஓடுவது எது?'' என்று கேட்டது.

“காலம்!'' என்றான்.

அடுத்த கணம், “சிறுவனே! என் கேள்விகளுக்குசரியான பதிலை சொல்லிவிட்ட நீ சிறந்தஅறிவாளி தான். நான் தாயன்பை புரிந்துகொள்ளாமல் என் அன்னையை சிறியவஸ்துவான என் நாவால் திட்டி வதைத்தேன்.அவளை கொடுமைப்படுத்தினேன்.

“என்னை பத்து மாதம் சுமந்து பெற்ற அவள்மணி வயிற்றை எட்டி உதைத்தேன். பெற்றமனம் துடித்தது. நான் என் தாய்க்கிழைத்தகொடுமைகளை பார்த்த ஒரு முனிவர் "நீபிரம்மராட்சனாகக் கடவாய்" என்றுசபித்துவிட்டார். அது போலாகிவிட்டது.

“நான் தவறுகளை உணர்ந்து" எனக்கு எப்போதுசாபவிமோசனம்?" என்று கேட்டேன். காலம்வரும் பொழுது என்று சொல்லி விட்டுபோய்விட்டார் அம்முனிவர். அதற்குத் தான் நான்இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன்.

“உருண்டு வேகமாக ஓடும் காலம் உன் வடிவில்வந்து என்னை சாபத்தில் இருந்துவிமோசனமடைய செய்து விட்டது...'' என்றுசொல்லி சுடலையை வணங்கி எழுந்த போதுபிரம்மராட்சஷன் மறைந்து அழகான ஒருஇளைஞன் அங்கிருந்தான்.

அந்த இளைஞன் ஆலமரத்தில் தொங்கியதலைகளை எல்லாம் எடுத்து மண் தோண்டிபுதைத்தான். ஆலமரத்தடியில் இருந்தமேடையையும் பிற பகுதிகளையும்சுத்தப்படுத்தினான். குளக்கரையை சுற்றிவளர்ந்து புதிராக மண்டிக் கிடந்த செடி,கொடிகளை நீக்கி குளக்கரையைஅழகாக்கினான்.

பிரம்மராட்சஷனின் கொடிய மூச்சுப்பட்டுவாடியும் கருகியும் போய் இருந்த ஆலமரம்இப்போது பச்சை பசேலென்ற இலைகளோடுகாணப்பட்டது. மரத்தை விட்டுச் சென்றபறவைகள் எல்லாம் திரும்பி ஆலமரத்தில்தங்கின.

அவைகளில் விதவிதமான குரலொலிகள்இனிமையாக கேட்டன. வழிப் போக்கர்களும்,யாத்ரீகர்களும் ஆலமரத்தடியில் உள்ளமேடையில் தங்கி ஓய்வெடுத்து குளத்து நீரைபருகி மகிழ்ந்தனர். இவ்வளவுக்கும் காரணமானசுடலையை
 எல்லாரும் பாராட்டினர்.

Sunday 4 October 2015

வாழ்கையில் முன்னேறலாம்...!

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, "அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?", என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.

"அன்பரே.. நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம்." அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.

கணவான், "எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா?".  என்று கேட்டார்

கோட் சூட் வாலிபன் சொன்னான், "நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்".

"எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்".

"அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். "நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா", என்றான்.

அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன் பயன்படுத்தினால் வாழ்கையில் முன்னேறலாம்!

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ?


கழுகுகள் நமக்கு கற்றுதரும்  பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி
வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்
கூடியவை.
அவற்றை வலிமை மற்றும் தைரியம்
ஆகியவற்றின் சின்னமாகக்
கருதுகின்றோம்.
ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச
சக்திகளும், வலிமையும், தைரியமும்
பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை
கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக்
கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,
பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள்
பலவீனமாகவே இருக்கின்றன.
அவை அப்படியே சுகமாகவும்,
பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்
வலிமையாகவும், சுதந்திரமாகவும்
மாறுவது சாத்தியமல்ல.

எனவே
குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய
உணவளித்து, பாதுகாப்பாக
வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள்
பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி
விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும்
படுக்கையினைக் கலைத்து சிறு
குச்சிகளின் கூர்மையான பகுதிகள்
வெளிப்படும்படி செய்து கூட்டை
சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து
விடுகின்றது.

பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து
இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத்
தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத
கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை
வந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின்
வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்
உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து
மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்
பயணிக்க தைரியமற்று பலவீனமாக
நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன்
வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு
முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே
தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே
பாதுகாப்பாகத் தங்கி விட
முடிவெடுக்கலாம்.

ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும்
பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய
இடமல்ல.

சுயமாகப் பறப்பதும்
இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப்
பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை
அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில்
என்ன செய்வதென்று அறியாமல் வெளியே
எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்

அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக்
குஞ்சின் உணர்வுகளை லட்சியம்
செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து
வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில்
கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப்
பறக்க முயற்சி செய்கின்றது.

முதல் முறையிலேயே கற்று விடும்
கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க
முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும்
நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்
குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு
மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக
இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன்
குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப்
பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்
கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு
விடுகிறது.
மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப்
பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்
குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி
விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல
முறை நடக்கும்
இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின்
சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று
வெளியில் பறக்கும் கலையையும்
விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக்
கொள்கிறது.

அது சுதந்திரமாக,
ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப்
பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக
கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின்
பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி
நிற்கும்
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை
முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த
சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,
தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு
தன் வாழ்நாளில் என்றென்றைக்கும்
கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை
விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய
போது அது ஒருவிதக் கொடூரச்
செயலாகத் தோன்றினாலும்
பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும்
யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்
பேருதவி என்பதை மறுக்க முடியாது
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும்
யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,
பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால்
அந்தக் காரணத்திற்காகவே அந்த
சூழ்நிலைகளையும், அனுபவத்தையும்
மறுப்பது வாழ்வின் பொருளையே
மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான்
அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆனால் கப்பலை உருவாக்குவது அதை
துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல.
கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி
வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,
மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில்
முதல் முதலில் தள்ளப்பட்டதை
எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்
குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப்
பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்
கொள்வேன்" என்று நினைக்குமானால்
அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே
கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு
செய்ததாக சரித்திரம் இல்லை
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல
பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட
கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது"
என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை
இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில்
கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது
பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு
குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்
இருந்ததில்லை.

அதற்கான அவசியம்
இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு
குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக
நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க
வேண்டும் என்பதில் குறியாக
இருக்கிறார்கள்.

அதில் தவறில்லை. ஆனால்
தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள்
குழந்தைகள் படக்கூடாது என்று
நினைக்கும் போது பாசமிகுதியால்
அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின்
பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத்
தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம்
செல்ல பல மைல்கள் நடந்தேன்.

அதனால் நீயும்
நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும்
என்று சொல்லவில்லை. வசதிகளும்,
வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக்
காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத்
தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின்
பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது
அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை
பிள்ளைகள் படத் தேவையில்லைதான்.

ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான
அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது'
என்று நினைப்பது அந்தப் பிள்ளையின்
உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்
செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில
கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு
அவசியமானவையே.

அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும்
போது தான் அவன் வலிமை அடைகிறான்.
அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப்
பெற்றோர் நினைப்பது அவனுக்கு
வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போது
பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக
இருக்கலாம்.
ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது
வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல...